யுபிஎஸ்சியின் பட்டியலில் ஜடின் கிஷோர் மற்றும் பிரதிபா வர்மா ஆகியோர் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தனர் .மக்களவை சபாநாயகர், ஓம் பிர்லா, பிற தலைவர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன.

பிரதீப் சிங் ஹரியானாவைச் சேர்ந்தவர், ஜடின் கிஷோர் டெல்லியில் வசிப்பவர், பிரதிபா வர்மா உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்.
"இது என் கனவு . இது என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம். நான் எப்போதும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்க விரும்பினேன். சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்காக நான் பணியாற்ற விரும்புகிறேன்" என்று பிரதீப் சிங் கூறினார்.
பிரதீப் சிங் முன்னாள் கிராமத் தலைவர் சுக்பீர் சிங்கின் மகன். பரதீப் சிங் சோனேபட்டில் வளர்ந்து உள்ளூர் பள்ளிக்குச் சென்றார்.முர்தலில் உள்ள( Deen Bandhu Chhotu Ram University) தீன் பந்து சோட்டு ராம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் (கணினி அறிவியல்) பட்டம் பெற்றார்.தற்போது அவர் ஃபரிதாபாத்தில் உள்ள தேசிய சுங்க, மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் அகாடமியில் இருக்கிறார்.
திரு சிங், நாட்டின் கல்வி மற்றும் வேளாண் துறைகள் முக்கியமானவை மற்றும் அவரது இதயத்திற்கு நெருக்கமானவை என்றார்.
பிரதீப்சிங் தந்தை சுக்பீர் சிங், எங்கள் குடும்பத்தின் கனவு நனவானது என்றார்.
👏👏👏
ردحذفإرسال تعليق